இலங்கையில் கடந்த 72 மணி நேரத்தில் 89 கொரோனா நோயாளர்கள் அடையாளம் – இராணுவத் தளபதி
இலங்கையில் கடந்த 72 மணி நேரத்தில் 89 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்களில் ஆயிரத்து 197 பேர் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் 42 பேர் வெளிநாட்டினர் என்பதுடன், ஆயிரத்து 155 பேர் இலங்கையர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் கடைபிடிக்குமாறும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் பாடசாலை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதால், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சுகாதார உத்தரவுகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு கற்பிப்பது அவசியமாகும் என்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வலியுறுத்தியுள்ளார்.