சற்று முன்னர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் திடீரென ஏற்பட்ட அனர்த்தம்! பதற்றமடைந்த ஊழியர்கள்!
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் தீப்பற்றியதில் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
சற்று முன்னர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படும் இடத்தில் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் அங்கு இருந்தவர்கள் பதற்றமடைந்துள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உடனடியாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.