தொடரும் சீரற்ற காலநிலை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தொடரும் சீரற்ற காலநிலை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஸ்ரீலங்காவின் வடக்கு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் பலமான காற்று வீசக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் நேரங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யலாம்.

இதனால் பொது மக்கள் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.