கண்டியில் திடீரென ஏற்பட்ட அனர்த்தம்! ஒருவர் உயிரிழப்பு
கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தான - தபோதாரகம வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றையதினம் மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியில் பயணித்த பெக்கோ இயந்திரம் ஒன்று திடீரென பின்நோக்கிச் சென்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.