அம்பாறை கிழக்கு கடற்பரப்பில் கப்பலில் பாரிய தீ விபத்து!
அம்பாறை சங்கமன்கந்த கடற் பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பலில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பனாமா அரசுக்கு சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பலே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கப்பலின் எஞ்ஜின் அறையில் ஏற்பட்டுள்ள தீ விபத்து தற்போதுவரை பிரதான எரிபொருள் தாங்கி வரையில் பரவவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலில் 23 பேர் கொண்ட குழுவினர் இருப்பதாகவும் அவர்களின் உதவிக்காக இலங்கை கடற்படையின் மூன்று கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.