அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபு
20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபு அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அச்சக பிரிவின் அதிபர் கங்கானி கல்பனா லியனகே இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (வியாழக்கிழமை) வௌியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபு நேற்றைய தினம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.