நீடிக்கும் தலைமைத்துவ பிரச்சினை – ஐ.தே.க.இன் விசேட செயற்குழுக் கூட்டம் நாளை

நீடிக்கும் தலைமைத்துவ பிரச்சினை – ஐ.தே.க.இன் விசேட செயற்குழுக் கூட்டம் நாளை

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதில் கட்சிக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக தற்போது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தநிலையில், இது தொடர்பாகவும் இன்றைய செயற்குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.