நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!
நாட்டில் நேற்றைய தினம் 9 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டது.
கட்டாரில் இருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், குவைத்தில் இருந்து நாடுதிரும்பிய 2 பேருக்கும், இந்தியாவில் இருந்து நாடுதிரும்பிய 4 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதன்படி, நாட்டில் இதுவரையில் 3 ஆயிரத்து 101 பேர் இலங்கையில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 45 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள்.
ஆயிரத்து 151 பேர் பொதுமக்களும், கடற்படையை சேர்ந்த 950 பேரும், கந்தகாடு கொத்தணி மற்றும் அதில் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து 640 பேரும் அதில் அடங்குகின்றனர்.
ஏனையவர்கள் என்று வரையறைக்குள் 313 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 883 பேர் குணமடைந்துள்ளனர்.
12 மரணங்கள் இதுவரையில் பதிவாகியுள்ளன.
206 பேர் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 160 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.