'துள்ளுவதோ இளமை' காலையில் பிளாப்.... மாலையில் ஹவுஸ்புல் - செல்வராகவன் சொல்கிறார்

'துள்ளுவதோ இளமை' காலையில் பிளாப்.... மாலையில் ஹவுஸ்புல் - செல்வராகவன் சொல்கிறார்

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் துள்ளுவதோ இளமை. தனுஷ் நாயகனாக அறிமுகமான இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஷெரின் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை கஸ்தூரி ராஜா இயக்கியதாகவே படத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். 

ஆனால் படத்தின் வெற்றிக்குப் பின் செல்வராகவன் அளித்த பேட்டியில், படத்தை தான் இயக்கியதாகவும் விநியோகஸ்தர்களிடம் விற்பதற்காகவே அப்பாவின் பெயரை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம்தான் தனுஷ் - செல்வராகவன் இருவருமே தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்கள்.

செல்வராகவன்

இந்நிலையில் செல்வராகவன் தனது முதல் படமான துள்ளுவதோ இளமை ரிலீசான போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: 'துள்ளுவதோ இளமை' வெளியான போது முதல் ஷோ பார்க்க  தியேட்டருக்குப் போனேன். அப்போது இந்தப் படம் பிளாப் என்றும், அடுத்த வாரம் டிவில வரும் பார்த்துக் கொள்வோம் எனவும் ஒருவர் சொன்னதைக் கேட்டு மனம் நொந்துபோனேன். அப்படியே வீட்டுக்கு சென்று தூங்கிவிட்டேன்.

மாலையில் உதவி இயக்குனர் போனில் என்னை அழைத்து சார் உங்க படம் ஹவுஸ்புல் சார் என்றார். வேறு ஏதாவது படமா இருக்கும் என சொன்னேன். நீங்க வாங்க சார் என்றார். பின்னர் தியேட்டருக்குப் போய் பார்த்தேன். டிக்கெட் வாங்க பெரிய கியூ நின்றது. பெரும் பண நெருக்கடிக்கு இடையில் தான் அந்தப் படம் வெளியானது". இவ்வாறு செல்வராகவன் தெரிவித்துள்ளார்.