புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரம் கொடுத்த அமிதாப் பச்சன்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரம் கொடுத்த அமிதாப் பச்சன்

இந்நியாவில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தமது ஊர்களுக்கு செல்ல பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உதவி புரிந்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களை இந்தியாவின் மத்திய - மாநில அரசுகள் பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றன.

இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்ல முடியாது தவித்த புலம்பெயர் தொழிலாளர்களை அமிதாப் பச்சன் தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளார்.

இதன்படி, மும்பையில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி, பிரயாக்ராஜ், கோரக்பூருக்கு தலா 2 விமானங்கள் வீதம் 06 விமானங்களில் 1,547 தொழிலாளர்களை அழைத்துச்செல்ல அமிதாப் பச்சன் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.