
எதிர்க்கட்சி அரசியல்வாதியின் மகளின் நிறுவனத்தால் அழிக்கப்படும் பாதுகாக்கப்பட்ட பகுதி!
கண்டியில் உள்ள ஹந்தன மலைத்தொடரில் 19 ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் தோட்டத்திற்காக அழிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏலக்காய் என்பது இலங்கையில் அதிகம் விளையும் மிகவும் பெறுமதி மிக்க சொத்தாகும்.
இந்த நிலையில் ஏலக்காய் தோட்டத்திற்காக பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதி அழிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பகுதி கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
கண்டி மாவட்டத்தில் ஒரு சக்திவாய்ந்த எதிர்க்கட்சி அரசியல்வாதியின் செல்வாக்கின் கீழ் இந்த அழிவு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டி மாவட்டத்தில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதியின் செல்வாக்கின் கீழ் இது நடக்கிறது என்றும் இந்த அரசியல்வாதியின் மகளுக்கு சொந்தமான ஒரு நிறுவனம் அந்த பகுதியை அழித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 27 முதல் இப்பகுதி அகற்றப்படுவதாக ஹந்தன பாதுகாப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 17, 2010 இன் 1641/28 என்ற வர்த்தமானி அறிவிப்பால் ஹந்தன மலைத்தொடர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதி (இபிஏ) என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.