கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 11 பேர்..!
கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 2,879ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 11 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதைத் தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,071ஆக காணப்படுவதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், 180 தொற்றாளர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.