சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதி! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை வீசிய இருவரை இம்மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.டி.லக்மால் ஜெயலத் இன்று உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை,அக்போபுர பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 20 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமான கேரளா கஞ்சா,ஹெரொயின் , புகையிலை, பீடி, அலைபேசி பற்றரி போன்ற பொருட்களை சிறிய பந்து வடிவில் அமைத்து வீசியுள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபர்களை சிறைச்சாலை அதிகாரிகள் பிடித்து திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் சந்தேக நபர்களை திருகோணமலை பதில் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.