அல்டயர் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடத்திற்கு ஜனாதிபதி விஜயம்

அல்டயர் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடத்திற்கு ஜனாதிபதி விஜயம்

பேரவாவிக்கு அருகில் சுமார் 2 ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அல்டயர் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விஜயம் மேற்கொண்டுள்ளார்

கொழும்பில் உள்ள உயரமான கட்டிடங்களில் ஒன்றாக இந்த அல்டயர் கட்டிடம் கருதப்படுகிறது.

முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கண்காணிப்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் குறித்த கட்டிடத்திற்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு கட்டிடங்களை கொண்ட இந்த வளாகத்தின் ஒரு கட்டிடத்தில் 38 மாடிகளும் மற்றைய கட்டிடத்தில் 63 மாடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்ற கட்டிடங்களினாலே சுற்றுலா பயணிகள் ஈர்க்கப்படுவதாக குறித்த விஜயத்தின் பொது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.