சோவியத் யூனியனில் அத்துமீறி நுழைந்த கொரிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள்: 01-09-1983

சோவியத் யூனியனில் அத்துமீறி நுழைந்த கொரிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள்: 01-09-1983

983-ம் ஆண்டு சோவியத் யூனியனில் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 269 பேர் பலியானார்கள். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1981 - மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அதிபர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

 

1983-ம் ஆண்டு சோவியத் யூனியனில் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 269 பேர் பலியானார்கள்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1981 - மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அதிபர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

* 1983 - பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் லோரன்ஸ் மாக்டொனால்ட்டும் ஒருவர்.

* 1984 - யாழ்ப்பாணம் திக்கத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 20 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

* 1985 - அமெரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

* 1991 - உஸ்பெகிஸ்தான், சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறி விடுதலையை அறிவித்தது.

* 2004 - ரஷ்யாவில் பெஸ்லான் நகரப் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று.

* 2007 - மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.