வழமைக்கு திரும்பியது ஸ்ரீ தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்
ஸ்ரீ தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தள பிரிவு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது நேற்று (திங்கட்கிழமை) சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தலதா மாளிகையின் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்பட்டது.
இதனால் சில மணிநேரம் குறித்த இணையத்தளம் செயலிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விரைந்து செயற்பட்ட அதிகாரிகள், இணையத்தளத்தை மீண்டும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில், குறித்த இணையத்தளம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.