இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வடக்கு மீன்பிடித்தொழில் பெரும் ஆபத்தில் -பாதுகாப்பு அமைச்சு புள்ளிவிபரங்களுடன் தகவல்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வடக்கு கடற்பரப்பில் 4,356 இந்திய மீனவப் படகுகள்அத்து மீறி பிரவேசித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் வடக்கில் மீன்பிடித் தொழில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய மீன்பிடிப் படகுகள் மீன்பிடிப்பதற்காக இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்துள்ளமை தொடர்பிலான மாதாந்த அறிக்கையை சமர்ப்பித்த பாதுகாப்பு அமைச்சு, மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளது.
இவ்வாறு அத்துமீறியவேளை ஐவர் கைது செய்யப்பட்டுள்னர்.
2015 ஆம் ஆண்டில் இருந்து 71,609 இந்திய மீனவப் படகுகள் இலங்கை எல்லைக்குள் பிரவேசித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது 2,916 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.