முகக்கவசத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹெரோய்ன் மீட்பு

முகக்கவசத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹெரோய்ன் மீட்பு

கம்பஹா - கனேமுல்ல பகுதியில் முகக்கவசத்துக்குள் ஹெரோய்ன் கடத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் ஒருவரை பொலிஸார் கைது செய்த போது அவரின் முகக்கவசத்துக்குள் ஹெரோய்ன் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

சிறிய அளவில் 7 பொதிகளில் இந்த ஹெரோய்ன் முகக்கவசத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 36 நபருடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த ஹெரோய்ன் போதைப்பொருள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.