நான்கு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ரணில்

நான்கு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ரணில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விசாரணைகள் முடிந்து வெளியேறியுள்ளார்.

அவரிடம் சுமார் நான்கு மணி நேரம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் 10 மணிக்கு ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகியிருந்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை வகித்த நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

முன்கூட்டிய தகவல் கிடைத்தும் அந்த தாக்குதலை தடுக்க தவறியதாக முன்னாள் ஆட்சியாளர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.

கடந்தாண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல்களில் சுமார் 300 பேர் வரை கொல்லப்பட்டதுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.