இரும்பு தொழிற்சாலையொன்றில் தீ பரவல்
நீர்கொழும்பு-பமுணுகம-நூகபே சந்திக்கு அருகில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் செயற்பட்டுள்ளனர்
இதேவேளை கொச்சிக்கடை-பல்லன்சேன பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடு ஒன்றில் இன்று காலை தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது தீயை அணைப்பதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.