நேற்றைய தினத்தில் மாத்திரம் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நேற்றைய தினத்தில் மாத்திரம் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் நேற்றைய தினம் 17 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதற்கமைய இலங்கையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 12 அதிகரித்துள்ளது.

இறுதியாக தொற்றுறுதியான 12 பேரும் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய மூன்று பேருக்கும் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானது.

இது தவிர இந்திய கடலோடிகள் இரண்டு பேருக்கும் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை தொற்றுறுதியான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் நேற்றைய தினம் குணமடைந்தனர்.

இதற்கமைய கொவிட்-19 தொற்றுறுதியான 2 ஆயிரத்து 860 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் கொவிட்-19 தொற்றுறுதியான 140 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.