புத்தளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து- வீதியில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
புத்தளம்-அட்டவில்லுவ பிரதேசத்தில் வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண்ணொருவர் மீது பாரவூர்தி ஒன்று மோதியதில் குறித்த பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
நேற்று (30) இடம்பெற்ற இந்த விபத்தில் 70 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், குறித்த பெண் புத்தளம் அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர் அனுமதிப்பத்திரம் இன்றியே குறித்த பாரவூர்தியை செலுத்தியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபரை இன்றைய தினம் (31) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.