மலேசியா, டிரினிடாட் டொபாகோ, கிர்கிஸ்தான் விடுதலை நாள்

மலேசியா, டிரினிடாட் டொபாகோ, கிர்கிஸ்தான் விடுதலை நாள்

மலேசியா 1957-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி ஐக்கிய பிரிட்டனிடம் இருந்து மலேசியா விடுதலைப்பெற்றது. அதேபோல் டிரினிடாட் டொபாகோ 1962-ம் ஆண்டும், கிர்கிஸ்தான் சோவித் ரஷ்யாவிடம் இருந்து 1991-ம் ஆண்டு விடுதலை பெற்றது. மேலும், இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1919 - அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. * 1920 - போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல்ஷெவிக்குகளுடன் இடம்பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்றது. * 1945 - ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி

 

மலேசியா 1957-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி ஐக்கிய பிரிட்டனிடம் இருந்து மலேசியா விடுதலைப்பெற்றது. அதேபோல்  டிரினிடாட் டொபாகோ 1962-ம் ஆண்டும், கிர்கிஸ்தான் சோவித் ரஷ்யாவிடம் இருந்து 1991-ம் ஆண்டு விடுதலை பெற்றது.

மேலும், இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1919 - அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.

* 1920 - போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல்ஷெவிக்குகளுடன் இடம்பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்றது.

* 1945 - ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

* 1957 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலாயா கூட்டமைப்பு விடுதலை பெற்றது.

* 1962 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து திரினிடாட் டொபாகோ விடுதலை பெற்றது.

* 1968 - கார்பீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் போட்டியொன்றில் ஒரு ஓவரில் 6 சிக்சர் எடுத்து சாதனை புரிந்தார்.

* 1978 - இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.

* 1986 - கலிபோர்னியாவில் இரு விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில் 67 பேர் வானிலும் 15 பேர் தரையிலும் விழுந்து பலியானார்கள்.

* 1986 - சோவியத் பயணிகள் கப்பல் அட்மிரல் நகீமொவ் கருங்கடலில் மூழ்கியதில் 423 பேர் கொல்லப்பட்டனர்.

* 1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடாக அறிவித்தது.

* 1994 - ஐரியக் குடியரசு இராணுவம் போர் நிறுத்தத்தை அறிவித்தது.

* 1997 - வேல்ஸ் இளவரசி டயானா பாரிஸில் கார் விபத்தில் பலியானார்.

* 1999 - புவெனஸ் ஐரிசில் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலையத்தில் இருந்து புறப்பபடம்பொழுது விபத்துக்குள்ளானது. இதில் 65 பேர் கொல்லப்பட்டனர்.

* 2005 - பக்தாத்தில் அல் ஆயிம்மா பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 1,199 பேர் பலியானார்கள்

* 2007 - அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடிகர் சரத்குமார் ஆரம்பித்தார்.