Easy Cash மூலம் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவன் கைது

Easy Cash மூலம் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவன் கைது

பலாங்கொடை பகுதியில் ஈசி கேஷ் (Easy Cash) ஊடாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவரை ஹங்வெல்ல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தனியார் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்றுவரும் இளைஞன் என்பது தெரியவந்துள்ளது

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 25 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னர் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிய நபர் ஒருவரையும் காவல்துறையினர் சூட்சுமமான முறையில் கைது செய்துள்ளனர்.

இரண்டாவதாக கைது செய்யப்பட்ட நபரிடமிருந்த மகிழூர்தி, நான்கு வங்கி அட்டைகள் மற்றும் நான்கு கைப்பேசிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக ஹங்வெல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான விரிவான விசாரணைகளை ஹங்வெல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.