சிலாபத்தில் ஒருவர் மாயம்! தீவிர தேடுதலில் பொலிஸார்
சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெதுரு ஓயாவில் நேற்றையதினம் குளிக்கச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுஹெர, இதுல்கொடகந்த பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சுழியோடி பொலிஸ் அதிகாரிகளுடன் கடற்படையினரும், மீனவர்களும் கூட்டாக இணைந்து நீரில் மூழ்கி காணாமல் போன குறித்த நபரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.