கண்கள், கைகள் கட்டப்பட்டு மட்டக்களப்பு கொண்டுவரப்பட்ட ஊடகவியலாளர் எக்னெலிகொட!
இலங்கை ராணுவ புலனாய்வுத்துறையின் கீழ் இயங்கிய ட்ரிப்போலி பிளட்டூன் மற்றும் அவர்களின் முஸ்லிம் படையணி கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளைச் செய்து வந்தன.
மட்டக்களப்பு, காத்தான்குடி, பூனச்சிமுனையில் தென்னைமரத் தோட்டம் போன்ற பகுதியில் அமைக்கப்பட்ட ஒரு இரகசிய முகாமில் இந்த படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
வழக்கமாக அங்கு கைதிகளைக் கொண்டு வந்து படுகொலை செய்யும் சூழல் நிலவிய நிலையில், ஒரு குறிப்பிட்ட நாளில் பல சிங்கள உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் அங்கு வருகை தந்திருந்தது அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அன்று இந்த ரகசிய முகாமுக்கு கொண்டு வரப்பட்ட கைதிகளில் ஒருவர் மிகவும் முக்கியமானவர் என்றும் அவர் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் நாற்காலியில் அமர்த்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தததும் தெரியவருகிறது.
இறுதியில், ட்ரிப்போலி பிளட்டூனைச் சேர்ந்த ரிஸ்வான் என்பவன், அந்த நபரின் தலையில் மூன்று முறை சுட்டு படுகொலை செய்தது கண்டறிப்பட்டது.
கொல்லப்பட்ட அந்த நபர் கொழுப்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிய நிலையில், இது தொடர்பான விரிவான விடயங்களை ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றை உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...