சுழற்றி அடித்த காற்று - மீனவர்களுக்கு கிடைத்த அதிர்ஸ்டம்!

சுழற்றி அடித்த காற்று - மீனவர்களுக்கு கிடைத்த அதிர்ஸ்டம்!

புத்தளத்தில் சுழற்றி அடித்த காற்றால் இன்று மீனவர்களுக்கு பெரும் அதிர்ஸ்டம் அடித்துள்ளது. 

புத்தளம்- உடப்பு கிராமத்தில் உள்ள கடற்பரப்பில் இன்று (16) காலை இயந்திரப் படகு மூலம் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். 

கடலுக்குச் சென்ற மீனவர்களின் வலையில் விளமீன் ஏராளமாக பிடிபட்டுள்ளது. 

அண்மைய நாள்களாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் அதிகளவில் புத்தளம் மாவட்டமே பாதிக்கப்பட்டது. 

தொடர்ந்து வீசிய காற்றின் வேகத்தால் மீனவர்கள்  கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியது.

இந்த நிலையில் இன்று  உடப்பு மீனவர்கள் கடலுக்குச் சென்ற வேளை கூடுதலான மீன்கள் அவர்களது வலையில் பிடிபட்டதால் சந்தோஷமடைந்தனர்.

அதனையடுத்து ஒரு கிலோ மீன் 500 ரூபா வரை இன்று விற்பனை செய்யப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.