கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் தற்போதைய நிலைவரம்

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் தற்போதைய நிலைவரம்

கந்தக்காடு புனர்வாழ்வு மற்றும் மறுவாழ்வு மையத்தில் அடையாளம் காணப்பட்ட 639 கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 614பேர் முழுமையாக குணமடைந்து  வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த புனர்வாழ்வு மையத்துடன் தொடர்புடைய 25பேர் மாத்திரமே தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரையும் 2989பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 849ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி 128பேர் மாத்திரமே தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், திருகோணமலை இராணுவத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக  நிறைவு செய்த 70 பேர், இன்று தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருகோணமலை இராணுவத்தால் நடத்தப்படும் 71தனிமைப்படுத்தல் மையங்களில், 7552பேர், தொடர்ந்து தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இதற்கிடையில், அபுதாபி மற்றும் கட்டாரில் இருந்து இன்று காலை 30 பேர், விசேட விமானம் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.

அதாவது, அபுதாபியிலிருந்து  வந்த விமானத்தில் 6 பேரும் கட்டாரில் இருந்து வந்த  2விமானங்களில், 24 பேர் வருகை தந்ததாகவும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் தேசிய மையம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த அனைவரும், திருகோணமலை இராணுவத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேசிய மையம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் நாட்டில் இதுவரை 221,910 பி.சி.ஆர்.பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2748 பி.சி.ஆர்.பரிசோதனைகள் செய்யப்பட்டதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.