களுபே ரொஷானின் சகோதரியும் அத்தையும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது

களுபே ரொஷானின் சகோதரியும் அத்தையும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது

பிரபல பாதாள உலகக்குழு தலைவரான அருண உதய ஷாந்த பதிரண என்ற “சமயங்” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான களுபே ரொஷானின் சகோதரி மற்றும் அத்தை ஒருவரும் 6 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீடியாகொட காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர் ஹிக்கடுவ-தொடகமுவ பகுதியில் வைத்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களை இன்று (29) பிற்பகல் பலபிடிய மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் மற்றும் மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதல் சந்தேக நபரான பெண் களுபே ரொஷானின் சகோதரி என்பதோடு மற்றைய பெண் களுபே ரொஷானின் மனைவியின் தாய் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மீடியாகொட காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.