மீண்டும் திறக்கப்படுகின்றது கட்டுநாயக்க விமான நிலையம்

மீண்டும் திறக்கப்படுகின்றது கட்டுநாயக்க விமான நிலையம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஸ்ரீலங்காவில் மூடப்பட்ட விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவியதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் பெருமளவில் நாடு திரும்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.

உலகளவில் ஏனைய நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போது நாடு திரும்பும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

இதனால் அடுத்த மாதத்திற்குள் விமான நிலையத்தை மீண்டும் திறப்பதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்புவதாலும், இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்கள் அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் பணி முடிவடைந்த நிலையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டுக்கு அழைத்து வருமாறு கோரிக்கை விடுத்துள்ள இலங்கை வெளிநாட்டவர்களை திருப்பி அனுப்புவது எந்த சூழ்நிலையிலும் நிறுத்தப்படாது என்று சுற்றுலா அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.