கடந்த 5 மாதங்களில் வறட்சியினால் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

கடந்த 5 மாதங்களில் வறட்சியினால் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் வறட்சியினால் 69 ஆயிரத்து 571 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்த்டு 32 ஆயிரத்து 423 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிகளில் 10 மாவட்டங்கள் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் வௌியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் திருகோணமலை மாவட்டமே அதிகமாக வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக 27 ஆயிரத்து 681 குடும்பங்களைச் சேர்ந்த 89 ஆயிரத்து 268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.