‘பிளக் பந்தர்’ போஸ்மேன் மரணம்

‘பிளக் பந்தர்’ போஸ்மேன் மரணம்

மார்வெல் சூப்பர் ஹீரோ ‘பிளக் பந்தர்’ புகழ் சாட்விக் போஸ்மேன் புற்றுநோயால் தனது 43 வயதில் காலமானார்.

அமெரிக்க நடிகர் சாட்விக் போஸ்மேன், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

போஸ்மேன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் இதனை பகிரங்கப்படுத்தவில்லை.

அவரது இழப்பு செய்தி இரசிகர்களையும் திரைப்பட உலகத்தையும் திகைக்க வைத்துள்ளது. அவரது இழப்புக்கு தற்போது பலரும் சமூகவலைதளங்களின் ஊடாக இரங்கல் செய்தியினை வெளியிட்டு வருகின்றனர்.

சாட்விக் போஸ்மேனின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சாட்விக் உண்மையான போராளி, சாட்விக் அதையெல்லாம் விடாமுயற்சியுடன், நீங்கள் மிகவும் நேசித்த பல படங்களை உங்களுக்குக் கொண்டு வந்தார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.