19 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!

19 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!

19 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம், இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றப்பட்டதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

19 ஆவது திருத்தை கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஜயம்பதி விக்ரமரத்ன மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட தரப்பினர் 19 ஆவது திருத்தைத்தை தொடர்ந்தும் முன்கொண்டுசெல்ல முடியாது என்ற எண்ணப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

 

19 ஆவது திருத்தை நீக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அவர்களும் உள்ளனர்.

இதற்கமையவே தாங்கள் மக்களிடம் ஆணை கோரியிருந்ததாகவும், அதற்காக மக்கள் தமது தரப்பினருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியுள்ளதாகவும் நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

எனவே, அது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட விதம் தொடர்பிலும், அதில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றமை தொடர்பிலும் மக்கள் புரிந்து கொண்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.