ஆனைவிழுந்தான் சரணாலய விவகாரம் – சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானம்!

ஆனைவிழுந்தான் சரணாலய விவகாரம் – சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானம்!

ஆனைவிழுந்தான் சரணாலய பகுதியில், சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 25 ஆம் திகதி,  ஆனைவிழுந்தான்  சரணாலயத்தின் 0.697 ஹெக்டேயர் நிலப்பரப்பில், சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மண்ணகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக சிலாபம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், குறித்த நிலப்பரப்பில் ஆயிரத்து 397 ஹெக்டேயர் நிலப்பரப்பு, 1997 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.