நியோமல் ரங்கஜீவ கொழும்பு உயர் நீதிமன்றில் தெரிவித்த விடயம்..!

நியோமல் ரங்கஜீவ கொழும்பு உயர் நீதிமன்றில் தெரிவித்த விடயம்..!

போதைபொருள் ஒழிப்பு குழு நடாத்திய சோதணை நடவடிக்கைகளின் தொகுப்பு அடங்கிய புத்தகத்தில் சோதணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நேரம் மற்றும் இடங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் மாற்றப்பட்டுள்ளதாக காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவ கொழும்பு உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடத்தை அவர் தெரிவித்தாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன், போதைபொருள் விற்பனையை காவற்துறையினர் சுற்றிவளைக்க முற்படும் பொழுமு அது தொடர்பில் முன்கூட்டியே அறிந்து கொள்ள பிரபல போதைபொருள் வர்த்தகரான வெலே சுதா என்பவர் காவற் துறை அதிகாரி ஒருவருக்கு மாதந்தோரும் 150,000 ரூபாய் கப்பம் வழங்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த காவற்துறை அதிகாரி யார் என அடையாளம் கண்டு அவரை கைது செய்ததாகவும் காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவ இதன் போது தெரிவித்துள்ளார்.