ஹீரோவாக அறிமுகமாகும் முகின் ராவ்!

ஹீரோவாக அறிமுகமாகும் முகின் ராவ்!

பிக்பொஸ் புகழ் முகின் ராவ் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகின் நடிக்கும் இந்த திரைப்படத்தை  பெண் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே நானி,  நித்யாமேனன் நடித்த ‘வெப்பம்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் முகினுக்கு ஜோடியாக திவ்யா பாரதி அல்லது சீரியல் நடிகையான சிவானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்,  நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.