முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்காக நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்படும் ஆசனம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்காக நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்படும் ஆசனம்!

நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆளும் கட்சி வரிசையில் முதலாவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுத்த கோரிக்கைக்கு அமைய அவருக்கு இந்த ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி ஆளும் கட்சியின் வரிசையில் நான்காவது ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தில் சிரேஷ்ட உறுப்பினருக்கு வழங்கப்படும் நான்காவது வரிசையின் முதலாவது ஆசனம் வழங்கப்பட்டது என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் விடுத்த கோரிக்கைக்கு அமைய தற்போது இந்த ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. வெற்றியின் உச்சப் பலன் கிடைப்பதற்கு சிறிது காலம் அமைதியாக இருக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.