சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் விடுதலையான நாள்: 28-8-1991

சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் விடுதலையான நாள்: 28-8-1991

உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வடகிழக்கில்ரஷ்யாவும், வடக்கில் பெலாரசும் மேற்கில் போலந்து, ஸ்லோவேக்கியா, ஹங்கேரி ஆகியனவும் தென்மேற்கில் ரொமானியா, மோல்டோவா ஆகியவையும் தெற்கில் கருங்கடலும் அசோவ் கடலும் உள்ளன. இந்நாட்டின் தலைநகரம் கியிவ் ஆகும். சோவியத் யூனியல் இருந்த உக்ரைன் 1991-ம் ஆண்டு அதனில் இருந்து பிரிந்து சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் விடுதலையான நாள்: 28-8-1991 உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வடகிழக்கில்ரஷ்யாவும், வடக்கில் பெலாரசும் மேற்கில் போலந்து, ஸ்லோவேக்கியா, ஹங்கேரி ஆகியனவும் தென்மேற்கில் ரொமானியா, மோல்டோவா ஆகியவையும் தெற்கில் கருங்கடலும் அசோவ் கடலும் உள்ளன. இந்நாட்டின் தலைநகரம் கியிவ் ஆகும். சோவியத் யூனியல் இருந்த உக்ரைன் 1991-ம் ஆண்டு அதனில் இருந்து பிரிந்து விடுதலை பெற்றது. இதே தேதியில் நடந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1845 - சயன்டிபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது. * 1849 - ஒரு மாதகால முற்றுகையின் பின்னர் வெனிஸ் நகரம் ஆஸ்திரியாவிடம் வீழ்ந்தது. * 1867 - ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவைப் பிடித்தது. * 1898 - காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார். * 1913 - நெதர்லாந்தின் அரசி வில்ஹெல்மினா த ஹேக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார். * 1916 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி, ருமேனியா மீதும், இத்தாலி ஜெர்மனி மீதும் போரை அறிவித்தன. * 1922 - ஜப்பான் சைபீரியாவில் இருந்து தனது படைகளை விலக்க சம்மதித்தது. * 1924 - சோவியத் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஜோர்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். * 1931 - பிரான்சும், சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. * 1943 - நாசி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக டென்மார்க்கில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது. * 1963 - மார்ட்டின் லூதர் கிங், 2 லட்சம் பேருடன் ‘என் கனவு யாதெனில்...’ என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார். * 1964 - பிலடெல்பியாவில் இனக்கலவரம் ஆரம்பித்தது. * 1988 - ஜெர்மனியில் விமான சாகசம் ஒன்றின் போது மூன்று விமானங்கள் மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர். * 1991 - சோவியத்திடம் இருந்து உக்ரைன் விடுதலை பெற்றது. * 1991 - மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து விலகினார். * 1996 - வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா மணமுறிவு ஏற்பட்டது. * 2006 - திருகோணமலை, சம்பூரில் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். * 2006 - இலங்கையில் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன. இறப்புகள் * 430 - புனித அகஸ்டீன், மெய்யியலாளர் (பி. 354) * 1891 - ராபர்ட் கால்டுவெல், பிரித்தானியத் தமிழறிஞர் (பி. 1814) * 1973 - முகவை கண்ண முருகனார், கவிஞர், தமிழறிஞர் (பி. 1890)