கொரோனா தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...!
நாட்டில் இன்றைய தினம் இருவருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவருக்கே கொவிட் 19 தொற்றுறுதியானதாக குறிப்பிடப்படுகிறது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 985 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்தநிலையில், 143 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்ணொருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
சிலாபம் ஆதார மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் கே.ஜீ மல்லவாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
27 வயதான இந்த பெண், டுபாயில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ததன் பின்னர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த போது கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கர்ப்பிணிப்பெண் பங்கதெனிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த கர்ப்பிணிப்பெண்ணுடன் தொடர்பை பேணிய 15 பேர் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தினுஷா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் இன்றைய தினம் 11 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர.;
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 830 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 142 ஆக குறைவடைந்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக மாலைத்தீவு மற்றும் அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த மேலும் 186 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்.
அவர்கள் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை இன்று மதியம் வந்தடைந்தனர் என எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.
மாலைத்தீவில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தையும், அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 160 இலங்கையர்கள் மத்தள விமான நிலையத்தையும் வந்தடைந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.