எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாடல்கள் மூலம் வித்தியாசமான சிகிச்சை..!
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டார்
அவரது உடல்நிலை மோசமடைய அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொறுத்தப்பட்டதுடன் முறையான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வந்தன.
இவரது உடல்நிலை தொடர்பில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகனான எஸ்.பி.பி.சரண் காணொளி மூலம் தினமும் தகவல் வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில், நேற்றைய தினம் எஸ்.பி.பி.சரண் காணொளி ஒன்றை வெளியிட்டு தனது தந்தையின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
தந்தையின் நுரையீரல் தற்பொழுது சீராக உள்ளதாகவும், அவரது குரல் வளையில் சீரான தன்மையை அவதானிக்க முடியுமாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தான் தந்தையை பார்க்க சென்ற போது தந்தை தன்னிடம் ஏதோ ஒன்றை சொல்ல முற்பட்டதாகவும், ஆனால் அவரால் பேசுவதற்கு இயலுமானதாக இருக்கவில்லை எனவும் எஸ்.பி.பி.சரண் அந்த காணொளியின் வாயிலாக குறிப்பிடுகின்றார்.
அத்துடன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வரும் சிகிச்சை அறையில் எப்பொழுதும் அவர் பாடிய பாடல்கள் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தினசரி பத்திரிகை வாசிக்கும் பழக்கம் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இருப்பதால் அவரது மகனான எஸ்.பி.பி.சரண் தினசரி பத்திரிகையை தந்தைக்கு வாசித்து காட்ட அனுமதி வேண்டும் என மருத்துவர்களிடம் கோரியுள்ளார்.
இதற்கு மருத்ததுர்கள் அனுமதி வழங்கியுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.