குப்பைகளை அகற்றும் பணிகளை ஆரம்பித்த சுகாதாரத்துறை அதிகாரிகள்..!
கற்பிட்டி பிரதேச சபைக்கு சொந்தமான புத்தனம்-மதுரங்குளம் பிரதான வீதியின் இரு புறமும் முறையற்ற விதத்தில் குப்பைகள் விசப்படுவதனால் பிரதேச வாசிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறியப்படுத்தியிருந்தோம்.
இதனை தொடர்ந்து குறித்த பகுதியை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகளும் சுகாதார துறையை சேர்ந்த அதிகாரிகளும் இந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டமையை எம்மால் காணக்கூடியதாய் உள்ளது.
அதேபோல், எமில்டன் ஆற்று பகுதியிலும் முறையற்ற விதத்தில் குப்பைகள் வீசப்படுவதனை நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.
அந்த பகுதியில் இருந்த குப்பைகளை அகற்ற சகாதார துறையினர் நடவடிக்கை மேற்கொண்டமை சிறப்பம்சமாகும்.