GCE O/L பரீட்சை தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்....!

GCE O/L பரீட்சை தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்....!

2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கான திகதியை இன்றைய தினம் அறிவிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது குறித்த விடயம் தொடர்பில் உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் கலந்துரையாடலின் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் உமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான வவுச்சருக்குரிய கால எல்லை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை செல்லுப்படியாகும் வகையில் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.