கொரோனா தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...!
நாட்டில் இன்றைய தினம் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற 10 கைதிகளுக்கும், கென்யாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் கொவிட் -19 தொற்றுறுதியானது.
இதன்படி கொவிட்- 19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2982 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இன்றைய தினம் 3 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்
இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 819 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் ஊடுறுவக் கூடும் எனவும் அதன்மூலம் சமூகத்திற்கு கொவிட்-19 பரவும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதான வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சமூகத்தில் மேற்கொள்ளப்படும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மூலம் எவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானமை கண்டறியப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.