கோட்டாபயவின் முக்கிய பிரதிநிதியாகினார் மஹிந்தானந்த அளுத்கமகே

கோட்டாபயவின் முக்கிய பிரதிநிதியாகினார் மஹிந்தானந்த அளுத்கமகே

ஸ்ரீலங்காவின் புதிய அரசியலமைப்பு பேரவையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரதிநிதியாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரின் நியமனம் குறித்த கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபாநாயகரின் தலைமைத்துவத்துடனான அரசியலமைப்பு பேரவையில் 10 உறுப்பினர்கள் உள்ளனர்.

அரசியலமைப்பு பேரவையின் 10 உறுப்பினர்களாக,

 

  • பிரதமர்,

 

  • எதிர்க்கட்சித் தலைவர்,

 

  • ஜனாதிபதியின் பிரதிநிதியாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்,

 

  • சிவில் அமைப்பின் உறுப்பினர் ஒருவர்,

 

  • பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரால் பெயர் குறிப்பிடப்பட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐந்து உறுப்பினர்கள்,

 

  • பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சியிலிருந்து ஒருவர்

 

ஆகியோரே செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.