ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட 347 புலனாய்வுத்துறை அறிக்கைகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னதாக நடந்த சம்பவங்கள் தொடர்பிலான ஆதாரங்கள் தன்னிடம் இல்லாமல் இருந்திருந்தால், தான் தற்போது சிறையில் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும் என அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபருமான நிலந்த ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2015 தொடக்கம் 347 புலனாய்வுத்துறை அறிக்கைகள் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தாலும், அது குறித்து மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தனக்கு ஒருபோதும் அவர்கள் அறியத்தரவில்லை என்றும் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளரும், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபருமான நிலந்த ஜெயவர்தன தெரிவித்தார்.