போதியளவு இடவசதி இல்லாததனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள்..!
நாட்டில் உள்ள அரச தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் போதியளவு இடவசதி இல்லாத நிலை நிலவுவதாகவும், இதனால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்குள் அஅழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவைகள் மற்றும் விமான நிலைய சங்கம் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி,போதிய இடவசதி கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்திற்கு அமையவே வெளிநாடுகளில் இருந்து நபர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதந்கிடையல்,இஸ்ரேலில் இருக்கும் 30 இலங்கையர்களை அழைத்து கொண்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரவிருந்த விமானம் அன்றைய தினம் நாட்டுக்குள் வராது என அந் நாட்டில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.