பயணிகளுடன் கவிழ்ந்த தொடருந்து! கைதான சந்தேகபரின் வீட்டில் இருந்த உபகரணங்கள்
களனி மற்றும் வனவாசல தொடருந்து நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட தொடருந்து விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபின் வீட்டில் இருந்து பல கருவிகள் மற்றும் தொடருந்து திணைக்களத்திற்கு சொந்தமான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்து விபத்து நேற்று(16) சனிக்கிழமை இடம்பெற்றிருந்த நிலையில் அதில் 12 படுகாயமடைந்திருந்தனர்.
இந்த நிலையில், தண்டவாளத்தில் இருந்த ஆணிகளை கழற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்டு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலதிக விசாரணை
அதன்படி, சந்தேக நநபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் தண்டவாளங்களை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் மூன்று இரும்பு நெம்புகோல்கள் மற்றும் அவற்றை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கருவிகள் என்பன மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர், வனவாசல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெலியகொட தலைமையக காவல்நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி, தலைமை ஆய்வாளர் உள்ளிட்ட குழுவினரால் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.