கொழும்பிலுள்ள மூன்று சிறைச்சாலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
கொழும்பின் மூன்று முக்கிய சிறைச்சாலைகளான ரிமாண்ட், மகஸின் மற்றும் வெலிக்கடை ஆகியவை விரைவில் சி.சி.டி.வி கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படவுள்ளதாக சிறை ஆணையர் மற்றும் செய்தித் தொடர்பாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.
"இது சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, சிறைகளுக்குள் நடக்கும் வன்முறை மற்றும் குற்றச் செயல்களைத் தடுக்கும்" என்று அவர் கூறினார்.
சி.சி.டி.வி கமராக்கள் ஏற்கனவே அகுனுகோலப்பெலஸ மற்றும் பூஸா ஆகிய சிறைச்சாலைகளில் பொருத்தப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் சிறைகளில் வெளிப்புற பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் சிறைகளில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது உதவியைப் பெறுவதற்கும் விசேட அதிரடிப்படை சிறைகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளன.
சிறைச்சாலைகளின் சுவர்கள் மீது தொலைபேசிகள் எறியப்படுவது போன்ற சட்டவிரோத பல வழக்குகள் உள்ளன என்று அவர் கூறினார்.
"இருப்பினும், சிறைச்சாலைகளுக்குள் கொண்டு வரப்படும் சட்டவிரோத பொருட்கள் தற்போது ஓரளவிற்கு குறைக்க முடிந்துள்ளது," என ஏகநாயக்க மேலும் கூறினார்.