சவுதியிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
சவுதி அரேபியாவின் தம்மத்தில் இருந்து இலங்கைக்கு நாளை மறுதினம் வியாழக்கிழமை (27) சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றுடன் இணைந்ததாக இந்த விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தேசிய விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
சவுதியிலுள்ள இலங்கையர் எவராவது தாயகம் திரும்ப விரும்பினால் மேற்படி அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.வரையறுக்கப்பட்ட இடங்களே உள்ளன, மேலும் முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுமெனவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறஜவஜத்துள்ளது.
சவுதியிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் பயணிகள் தங்கள் பி.சி.ஆர் அல்லது கோவிட் -19 சோதனை அறிக்கைகளை கட்டாயமாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.