கொழும்பில் சிக்கிய யாசகர்! கோடீஸ்வரர் என விசாரணையில் அம்பலம்

கொழும்பில் சிக்கிய யாசகர்! கோடீஸ்வரர் என விசாரணையில் அம்பலம்

கொழும்பில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யாகசர் கோடீஸ்வரர் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை ஆலயத்திற்கு அருகில் பிச்சை எடுத்து வந்த 64 வயதான நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபருக்கு இரண்டு மாடியில் சொகுசு பங்களா மற்றும் மூன்று ஆடம்பர கார்கள் உள்ளமை விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு சொந்தமான வேகன் ஆர் மோட்டார் வாகனம் ஒன்றும் மேலும் இரண்டு சொகுசு மோட்டார் வாகனங்களும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட யாசகர் தனது வீட்டின் மேல் மாடியை மாதம் 30 ஆயிரம் ரூபாவுக்கு மாதாந்த வாடகை அடிப்படையில் வழங்கியுள்ளார். பிச்சை எடுப்பது மூலம் தினமும் 5000 ரூபா பணம் அவர் சம்பாதிப்பதாக பொலிஸ் விசாரைணையில் தெரியவந்துள்ளது.

கொழும்பு ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், குறித்த யாசகர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இதன்போது மேற்கொண்ட விசாரணைகளில் அவர் கோடீஸ்வரர் என்ற விபரங்கள் தெரிய வந்துள்ளது.